ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நடிகர் அஜித் வீடு முன் பெண் தீக்குளிக்க முயற்சி.. அஜித்தால் வேலை பறிபோனதாக புலம்பல்..

நடிகர் அஜித் வீடு முன் பெண் தீக்குளிக்க முயற்சி.. அஜித்தால் வேலை பறிபோனதாக புலம்பல்..

நடிகர் அஜித் வீடு முன் பெண் தீக்குளிக்க முயற்சி.. அஜித்தால் வேலை பறிபோனதாக புலம்பல்..

போலீசார் கைது செய்த போது தனது சாவிற்கு அஜித் தான் காரணம் என பர்சானா சொல்லிக் கொண்டே சென்றார். தான் அஜித்தை நேரில் சந்திக்க வேண்டும், அவர் அனுப்பிய மெயிலால் தான் தனக்கு வேலை பறிபோனதாக புலம்பினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நடிகர் அஜித்தின் வீட்டின் முன்பு முன்னாள் தனியார் மருத்துவமனை ஊழியர் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

  சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டின் முன்பு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்த முன்னாள் ஊழியர் பர்சானா என்ற பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

  அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து நீலாங்கரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். போலீசார் கைது செய்த போது தனது சாவிற்கு அஜித் தான் காரணம் என சொல்லிக் கொண்டே சென்றார். தான் அஜித்தை நேரில் சந்திக்க வேண்டும், அவர் அனுப்பிய மெயிலால் தான் தனக்கு வேலை பறிபோனதாக புலம்பினார்.

  போலீசார் அவரிடம் காவல்துறை அதிகாரிகளை சந்த்தித்து முறையிடுமாறு கேட்டுக் கொண்டனர். இதனிடையே அப்பெண் தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டார். உடனே போலீசார் தண்ணீர் ஊற்றி அழைத்து சென்றனர்.

  இதையும் படிங்க: தண்ணீரை இலவசமாக வழங்குகள்: திரையரங்கங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

  இவர் நடிகர் அஜித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்த போது வீடியோ எடுத்து வெளியிட்டதாகவும், அதனால் மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்ததால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறி தீக்குளிக்க முயன்றார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Actor Ajith, News On Instagram, Nurse, Suicide