• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தண்ணீர் குடிக்கும் போது பல் செட் விழுங்கிய பெண்.. உயிரிழந்த சோகம்..

தண்ணீர் குடிக்கும் போது பல் செட் விழுங்கிய பெண்.. உயிரிழந்த சோகம்..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தண்ணீர் குடித்துக் கொண்டிருந்ததால் தன்னையறியாமல் அந்தப் பல்லை அவர் விழுங்கி விட்டதாக கூறப்படுகிறது.

  • Share this:
    சென்னையில் தண்ணீர் குடிக்கும் போது  செட் பல் விழுங்கிய பெண் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

    சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம், கே.பி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(48), இவரது மனைவி ராஜலட்சுமி(43), கடந்த வாரம் இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 பற்களை புதிதாக கட்டி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தண்ணீர் குடிக்கும் போது 3 பல்லில் ஒரு பல் கழன்று தொண்டைக்குள் சென்று விட்டதாக கூறப்படுகிறது. தண்ணீர் குடித்துக் கொண்டிருந்ததால் தன்னையறியாமல் அந்தப் பல்லை அவர் விழுங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    Also Read: காவலாளியை கட்டிப்போட்டு நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி - வடமாநில கும்பலின் கைவரிசையா விசாரிக்கும் காவல்துறை

    இதையடுத்து அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே செய்து பார்த்ததில் அதில் எதுவும் தெரியவில்லை என்றும் இந்த நிலையில் அவர் மீண்டும் மயக்கம் அடையவே போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    Also Read: பல்லடத்தில் குடியிருப்பில் நோட்டம் பார்த்த வடமாநில இளைஞர் - மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது குறித்து ராயலா நகர் போலீசாக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பல் விழுங்கியதால் இறந்து போனார அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா  என்ற கோணத்தில் ராயலா நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: