ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை - கணவனை கைது செய்து விசாரிக்கும் போலீஸ்

குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை - கணவனை கைது செய்து விசாரிக்கும் போலீஸ்

மனைவி தற்கொலையில் கணவன் கைது

மனைவி தற்கொலையில் கணவன் கைது

குழந்தைகளை கொன்று கவுரியின் தற்கொலைக்கு காரணமான கணவன் ரமேஷை போலீசார் நேற்று கைது செய்தனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திருநின்றவூரில் குழந்தைகளை கொன்று, இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆவடி அருகே திருநின்றவூர் நடுக்குத்தகை, திலீபன் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (33). இவர் பெயிண்டர்  வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுரி (24). இவர்களுக்கு திருமணமாகி  4ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு தீஷித்தா (3) என்ற மகளும், அஸ்வின் (ஒன்றரை) என்ற மகனும் உள்ளனர்.  பெயிண்டரான ரமேஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.  அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கவுரியிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 18ந்தேதி கௌரி ஏலச்சீட்டு எடுத்து வைத்திருந்த பணத்தில் இருந்து மது அருந்த பணம் கேட்டு ரமேஷ் தொல்லை செய்துள்ளார். அவர் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், ரமேஷ் மனைவி கவுரியிடம் தகராறு செய்து உள்ளார். பின்னர், அவர் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். இதனால், மன உளைச்சல் அடைத்து உள்ளார். மேலும்,  கவுரி வீட்டின் மேற்கூரையில் இருந்த இரும்பு பைப்பில் கயிறு கட்டி தனித்தனியாக தீஷித்தா, அஸ்வின் இருவரையும் தூக்கு மாட்டி தொங்க விட்டு கொலை செய்தார். பின்னர், அவரும் அருகிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புகாரின் அடிப்படையில் பட்டாபிராம் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கௌரிக்கு திருமணம் ஆகி 4ஆண்டுகள் ஆகிறதால், திருவள்ளூர் ஆர்.டி.ஒ விசாரணை நடைபெற்று வருகிறது.

போலீசாரின் விசாரணையில், மது அருந்த ரமேஷ் பணம் கேட்டு, மனைவி கௌரி கொடுக்காததால் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ரமேஷ் அவரை திட்டி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இதனால், மனமுடைந்த கௌரி இரு குழந்தைகளை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, குழந்தைகளை கொன்று கவுரியின் தற்கொலைக்கு காரணமான கணவன் ரமேஷை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், போலீசார் அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.s

செய்தியாளர்: கன்னியப்பன்

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Child murdered, Crime | குற்றச் செய்திகள், Death