உல்லாசத்திற்கு அழைக்கும் ஆண்களை உள்ளாடையுடன் தவிக்கவிட்டு செல்லும் பெண் - கோயம்பேடு போலீசார் வலைவீச்சு

விடுதி அறையில் அந்த நபரின் உள்ளாடையை மட்டும் விடுத்து மீதமுள்ள அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளார்.

உல்லாசத்திற்கு அழைக்கும் ஆண்களை உள்ளாடையுடன் தவிக்கவிட்டு செல்லும் பெண் - கோயம்பேடு போலீசார் வலைவீச்சு
மாதிரி படம்
  • Share this:
சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு ஆண்களிடம் நகை பணத்தை கொள்ளை அடிக்கும் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையை சேர்ந்த ஒய்வு பெற்ற வருவாய் துறை அதிகாரி ஒருவர், கடந்த ஞாயிற்று கிழமை இரவு பாலியல் தொழில் செய்யும் பெண்னை அழைத்து சென்று கோயம்பேடு தனியார் விடுதியில் உல்லாசமாக இருந்துள்ளார்.

காலை எழுந்து பார்க்கும் போது பாலியல் தொழில் செய்யும் பெண் ஒய்வு பெற்ற வருவாய்துறை அதிகாரியின் உள்ளாடையை மட்டும் விடுத்து மீதமுள்ள அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.


அவருடைய 5 சவரன் செயின்,3 தங்க மோதிரம் ,2 செல்போன்கள் ஆகியவை பெண் திருடிச்சென்றுள்ளார்.துணி கிடைக்காமல் தவித்த அதிகாரி,விடுதி ஊழியர் மூலம் புதிதாக துணி வாங்கி கொண்டு,கிண்டியில் தெரிந்த காவலரை அணுகியுள்ளார்.

இந்த சம்பவம் கோயம்பேட்டில் நடந்ததால் ,அப்பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்க அனுப்பியுள்ளனர்.இது தொடர்பாக போலிசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க: “திருமுல்லைவாயல் போலீஸ் ஸ்டேஷன் - வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம்“ வைரலாகும் இளைஞரின் கூகுள் ரீவியு
First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்