தாறுமாறாக ஓடிய ஆட்டோ மோதி சாலையோரம் தூங்கி கொண்டிருந்த பெண் உயிரிழப்பு!

அஞ்சலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்ற 3 பேரும் படுகாயத்துடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாறுமாறாக ஓடிய ஆட்டோ மோதி சாலையோரம் தூங்கி கொண்டிருந்த பெண் உயிரிழப்பு!
ஆட்டோ மோதி விபத்து ஏற்படும் சிசிவிடி காட்சி
  • News18
  • Last Updated: November 5, 2019, 12:18 PM IST
  • Share this:
சென்னை சென்ட்ரல் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ மோதிய விபத்தில் சாலையோரம் தூங்கி கொண்டிருந்த பெண் உயிரிழந்தார்.

தண்டையார்பேட்டையை சேர்ந்த காளியப்பன் என்பவர் தனது ஆட்டோவில் சென்டரலில் இருந்து மூலக்கொத்தலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சாலையின் குறுக்கே 2 நாய்கள் வந்ததால் அவற்றின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலை ஓரத்தில் தூங்கி கொண்டிருந்த அஞ்சலை, சித்ரா, பரண், பவானி ஆகியோர் மீது ஏறி இறங்கியது.


இதில் அஞ்சலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்ற 3 பேரும் படுகாயத்துடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் காளியப்பனை கைது செய்த யானைகவுனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also see...
First published: November 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading