ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை லாக்டவுனில் சூடுபிடித்த பிசினஸ்.. வீட்டில் பீர் தயாரித்த பெண் கைது

சென்னை லாக்டவுனில் சூடுபிடித்த பிசினஸ்.. வீட்டில் பீர் தயாரித்த பெண் கைது

மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு

மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு

வீட்டில் திராட்சை கேரட் கலவையுடன் ஈஸ்ட் சேர்த்து குடங்களில் வைத்து பீர் தயாரித்து வந்தது தெரியவந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னை திருவெற்றியூரில் வீட்டில் கேரட் பீர் தயாரித்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  திருவெற்றியூர் குப்பம் அருகே ஜெஜெ நகர் பகுதியில் வீட்டில் மதுபானங்கள் தயாரிப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவெற்றியூர் சட்டம்-ஒழுங்கு போலீசார் சோதனை மேற்கொண்டதில் வீட்டில் திராட்சை கேரட் கலவையுடன் ஈஸ்ட் சேர்த்து குடங்களில் வைத்து பீர் தயாரித்து வந்தது தெரியவந்தது.

  இதை தொடர்ந்து அனைத்தையும் பறிமுதல் செய்து மேரி என்ற பெண்மணியை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கொரோனா பேரிடர் காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு அதிலிருந்து வீட்டில் தயாரித்து வருவதாகவும் இதுவரை நான்கு முறை சிறை சென்று விட்டு வந்த நிலையிலும் தொடர்ந்து இதுபோன்று வீட்டில் மதுபானங்கள் தயாரித்து வந்ததை அடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள்