ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

’என்னையே ஹெல்மெட் போட சொல்வியா..’ - சமூக ஆர்வலரை மிரட்டிய காவலருக்கு அபராதம்!

’என்னையே ஹெல்மெட் போட சொல்வியா..’ - சமூக ஆர்வலரை மிரட்டிய காவலருக்கு அபராதம்!

மிரட்டிய காவலர்

மிரட்டிய காவலர்

அநாகரிகமாக திட்டிய காவலரையும் ஹெல்மெட் விழிப்புணர்வு வீடியோ ஒன்று பதிவு செய்து அதனை சென்னை போலீசார் வெளியிட வேண்டும் என வலியுறுத்தல்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை அண்ணாநகர் RTO அலுவலகம் அருகே ஹெல்மெட் அணியாமல் சென்ற காவலர் ஒருவரை ஹெல்மெட் அணிந்து செல்லுமாறு சமூக ஆர்வலர் காசிமாயன் என்பவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் வாகனத்தை நிறுத்தி காசிமாயனை ஆபசமாக திட்டி மிரட்டும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த நிலையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணித்து, தன்னை அநாகரிகமாக பேசித் தாக்க முற்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் காசிமாயன் காவல் ஆணையரகத்தில் புகாரளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காசிமாயன், நேற்று காலை அண்ணா நகர் ஆர்.டி. ஓ அலுவலகம் வழியாக சென்று கொண்டிருந்தபோது காவலர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதாகவும், தான் அவரை ஹெல்மெட் அணிந்து செல்லுமாறு கூறியதாகவும் அப்போது மது போதையில் இருந்த அந்த காவலர் தன்னை அநாகரிகமாக பேசி தாக்க முற்பட்டதாகவும் மேலும் காவலரான தான் ஹெல்மெட் அணிய மாட்டேன் எனவும் தெரிவித்ததாக காசிமாயன் கூறினார்.

Also Read:  சர்ச்சையான ட்விட்டர் பதிவு : ’வெறிப்பிடித்து பேசுபவர்களுக்கு உரைக்கதான் அப்படி பதிவிட்டேன்’ ஹெச்.ராஜா புது விளக்கம்!

பொது இடத்தில் காவலர் ஒருவர் தன்னை திட்டியதால் தான் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் காசிமாயன் தெரிவித்தார். மேலும், பொதுவெளியில் தன்னை அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த காவலர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் உடனடியாக போலீசார் அவர்களை பிடித்து விழிப்புணர்வு வீடியோ எனக் கூறி அவர்களை பேச சொல்லி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவது போல, தன்னை அநாகரிகமாக திட்டிய காவலரையும் ஹெல்மெட் விழிப்புணர்வு வீடியோ ஒன்று பதிவு செய்து அதனை சென்னை போலீசார் வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனிடைய காவலர், சமூக ஆர்வலரை அநாகரிகமாக பேசி தாக்க முற்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அந்த காவலர் யார்? என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் பெயர் கிருஷ்ணகுமார் என்பதும் அவர் சென்னை ஆயுதப்படை காவலர் என்பதும் தெரிய வந்தது. தற்போது அவர் கொரட்டூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

கடந்த ஜூலை மாதம் காவலர் கிருஷ்ணகுமார் மதுரவாயல் காவல் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது காதலர்கள் இருவர் சாலையில் பேசிக் கொண்டிருந்தபோது காதலியின் செல்போன் நம்பரை வாங்கி நள்ளிரவில் அந்த இளம் பெண்ணுக்கு கால் செய்து தொந்தரவு செய்துள்ளார் என்பதும் அப்போது இவர் மீது விசாரணை நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக சென்னை போக்குவரத்து போலீசார் காவலர் கிருஷ்ணகுமார் மீது வழக்கு பதிவு செய்து ரூ 100 அபராதம் விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Arunkumar A
First published:

Tags: Chennai Police, Viral Video