அக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்குகிறது சென்னை புறநகர் ரயில்கள் சேவை..

அக்டோபர் 7 ஆம் தேதியில் இருந்து புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 10:33 AM IST
  • Share this:
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் அனைத்து வகையான ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் சரக்கு ரயில்களும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இந்நிலையில் அக்டோபர் 7-ஆம் தேதியில் இருந்து புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. 

புறநகர் இரயில் சேவையில் பணியாற்றும் 100% பணியாளர்களை 1-ஆம் தேதியில் இருந்து சுழற்சி முறையில் இல்லாமல் முழுமையாக பணிக்கு வரும்படி அறிவுறுத்தல் செய்துள்ளனர்.

மேலும் 450-க்கும் மேற்பட்ட புறநகர் ரயில் சேவை தினசரி செயல்பட்டு வந்த நிலையில் தற்போது தினமும் 300 முறை ரயில்கள் இயக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் தேவைக்கு ஏற்ப முழுமையாக சேவை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க... டிஜிட்டல்மயமாகிறது எழும்பூர் அருங்காட்சியகம்..

 மேலும் புறநகர் ரயில் சேவை எங்கே வரை செயல்படும் எத்தனை முறை என்ற திட்டம் தற்போது வரையறுக்கப்பட்டு வருகிறது. இதுவரை புறநகர் ரயில் சேவைக்கான வழிமுறைகளை மத்திய ரயில்வே வெளியிடவில்லை. ஆனால் புறநகர் ரயில் சேவையை தமிழக அரசு அனுமதிக்க தயராக இருக்கிறது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading