தீபாவளிக்கு மழை இருக்குமா? வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேட்டி

தீபாவளிக்கு மழை இருக்குமா? வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேட்டி
புவியரசன்
  • News18
  • Last Updated: October 20, 2019, 1:43 PM IST
  • Share this:
தீபாவளி நெருங்கும் நிலையில் தமிழகத்தில் மழை தொடர்வதால், தீபாவளி பண்டியையை மக்கள் சிறப்பாக கொண்டாட முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

கேள்வி - வடகிழக்கு பருவமழை துவங்கி ஐந்து நாட்கள் மட்டும் ஆன நிலையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அளிக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு லைட் என்றால் என்ன? எதற்காக இது விடுக்கப்பட்டுள்ளது?


பதில் - ஆரஞ்சு அலர்ட் என்பது ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதை அறிவுறுத்த கொடுக்கப்படும் எச்சரிக்கை. இது தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கடலோர மாவட்டங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எந்தவித அச்சமும் அடைய தேவையில்லை.

கேள்வி - வடகிழக்கு பருவமழை தொடங்கி ஐந்து நாட்கள் மட்டும் ஆன நிலையில் தமிழகத்தில் எந்த அளவு மழை பதிவாகியுள்ளது? குறிப்பாக சென்னையில்?

பதில் - வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் நேற்றுவரை 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆனால் இயல்பாக 11செ.மீ மழை பதிவாகும். இது 10% குறைவு.

Loading...

சென்னையை பொருத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பாக 12 செ.மீ மழை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு நேற்றைய தினம் வரை 11 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது 5% குறைவு.

இன்றைய தினம் வரை, ஈரோடு மாவட்டத்தில், 9 சென்டிமீட்டர் மழை பதிவாகி வேண்டிய இடத்தில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது 70 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்?

கேள்வி - அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் கனமழை க்கும் வாய்ப்புள்ளது. அதனால் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய தினம் வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.

First published: October 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...