ஆகஸ்ட் 1 முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்க ஆலோசனை

ஆகஸ்ட் 1 முதல் சென்னையில் மெட்ரோ சேவை துவங்கலாமா என மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஆகஸ்ட் 1 முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்க ஆலோசனை
மெட்ரோ ரயில் (கோப்புப்படம்)
  • Share this:
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து மெட்ரோ சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. தற்போது வரை மெட்ரோ ரயில் எப்போது இயக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து கொரோனோ தொற்று பரவாமல் மெட்ரோவை இயக்க முடியுமா என்று மெட்ரோ அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

அதில் மெட்ரோ ரயிலில் 50 சதவிகிதம் பயணிகள் மட்டுமே கொண்டு இயக்கலாம் எனவும், மெட்ரோ ரயில் நிலையத்தில் வழங்கப்படும் காயின் போன்ற டிக்கெட்டுக்கு பதிலாக டெபிட் கார்ட் போன்று தொடாமல் பயன்படும் வகையில் டிக்கெட்டை பயன்படுத்தலாம் எனவும் ஆலோசனை செய்து வருகின்றனர்.



ஏற்கனவே தனிமனித இடைவெளி கடைபிடிக்க ஒரு மீட்டர் இடைவெளியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, முழுமையாக கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் மாநில அரசுடன் இணைந்து ஆலோசித்து முடிவு எடுக்கும் என மெட்ரோ அதிகாரிகள் கூறினர்.
First published: July 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading