சென்னையில் வாட்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பல் கைது

சென்னையில் வாட்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பல் கைது
  • News18 Tamil
  • Last Updated: December 15, 2019, 10:16 AM IST
  • Share this:
சென்னையில் வாட்ஸ் ஆப் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் கார்த்திக், லாரன்ஸ் என இரு இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்திய போலிசார், அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அவர்கள் அளித்த தகவலின்பேரில், பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த மணி, ராக்கி மற்றும் சரவணன் ஆகியோரையும் கைது செய்து போலிசார் விசாரணை நடத்தினர். அப்போது, கல்லூரி மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. ஆட்டோ ஓட்டுநரான கார்த்திக், தனக்கு தெரிந்த மாணவர்களின் மூலம் மற்ற மாணவர்களுக்கு தனது வாட்ஸ் ஆப் எண்ணை பரவ விட்டுள்ளார்.


அதில் கஞ்சா தேவை என தகவல் அனுப்புவோருக்கு கார்த்தியும், லாரன்ஸும் சப்ளை செய்து வந்துள்ளனர். அதில் வரும் பணத்தை 5 பேரும் பங்கிட்டுக் கொண்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா, 2 செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
First published: December 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading