சென்னை மாநகர பேருந்துகளில் வழங்கப்பட்டு வந்த ’ஒருநாள் பஸ் பாஸ் திட்டம்’ என்ன ஆனது..?

ஓர் ஆண்டாக நிறுத்தப்பட்டு வந்த இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வர தமிழக போக்குவரத்து கழகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகர பேருந்துகளில் வழங்கப்பட்டு வந்த ’ஒருநாள் பஸ் பாஸ் திட்டம்’ என்ன ஆனது..?
மாநகரப் பேருந்து
  • News18
  • Last Updated: January 23, 2020, 8:36 AM IST
  • Share this:
சென்னை மாநகர பேருந்துகளில் வழங்கப்பட்டு வந்த ஒருநாள் பஸ் பாஸ் திட்டம் நிறுத்தப்பட்டு ஓராண்டிற்கு மேல் ஆகிறது. 

சென்னை மாநகரில் ஒருநாளில் எந்த பகுதிக்கும் சென்று வரக்கூடிய வகையில், மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 50 ரூபாய் பாஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. படித்து முடித்து சென்னையில் வேலை தேடி அலையும் பட்டதாரிகள், சொந்த வேலை விஷயமாக சென்னைக்கு வரும் வெளியூர்காரர்கள், மாநகர சுற்றிப் பார்க்க ஆசைப்படுபவர்கள் என பல தரப்பினருக்கும் இந்த ஒருநாள் பாஸ் குறைந்த கட்டணத்தில் நிறைவான பயணத்தை தந்தது. 12 மணி நேரம் வரை பயன்படுத்தத்தக்க இந்த பஸ் பாஸ், சில காரணங்களால் கடந்த 2018ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

ஒருநாள் பாஸ் இல்லாததால் அதிக டிக்கெட் கட்டணத்தில் பயணம் மேற்கொள்வதாகவும், நாள்தோறும் 2 அல்லது மூன்று பேருந்துகள் மாறி செல்பவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் பயணிகள் கூறுகின்றனர்.


இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த திட்டத்தை கொண்டு வர தமிழக போக்குவரத்து கழகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கட்டணம் அதிகமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.

ஆனால், கட்டணத்தை உயர்த்தாமல் 50 ரூபாயில் பஸ் பாஸ் வழங்கினால்தான் தங்களுக்கு உதவியாக இருக்கும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனிடையே நவீன வசதிகளை கொண்டு க்யூ ஆர் கோடு மூலம் ஒரு பயணி எத்தனை முறை பயணம் செய்கிறார் என்பதை அறியவும், ஒரு நபர் மட்டுமே அந்த டிக்கெட்டில் பயணம் செய்கிறாரா என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலும் பஸ் பாஸ் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
First published: January 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்