தமிழகத்திற்கு மழை இருக்கிறதா...?

news18
Updated: November 10, 2019, 10:13 AM IST
தமிழகத்திற்கு மழை இருக்கிறதா...?
கோப்புப் படம்
news18
Updated: November 10, 2019, 10:13 AM IST
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடற்பகுதியில் மீனவர்களுக்கு எவ்விதமான எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், புல்புல் புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்க கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

மேலும், தமிழகத்தின் உள் மற்றும் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளது.


கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சேந்தமங்கலத்தில் 15 சென்டி மீட்டரும், ஓமலூர், செங்கம் பகுதிகளில் தலா 9 சென்டிமீட்டரும் மழை பதிவாகி இருக்கிறது.

 

Loading...

 
First published: November 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...