Home /News /tamil-nadu /

வெப்பத்திலிருந்து நிவாரணம்... அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு....!

வெப்பத்திலிருந்து நிவாரணம்... அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு....!

மாதிரிப் படம் (PTI)

மாதிரிப் படம் (PTI)

நீண்ட காலமாக நீடித்து வந்த வெப்பத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும் விதமாக அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி முதல் வாரத்தில் நீடித்து வந்த வெப்பமான நாட்கள் மற்றும் சூடான இரவுகளால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். தற்போது வங்கக் கடலில் இருந்து வரக்கூடிய கிழக்குக் ஆற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோரப் பகுதிகளில் குறைந்தது அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழையை அனுபவிக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை பதிவர்கள் தெரிவித்தனர்.
கிழக்கத்திய காற்று கடற்கரைக்கு அருகில் வருவதால் லேசான மழை எதிர்பார்க்கப்படுகின்றன.

இரண்டு காற்று ஓட்டங்கள் சந்திக்கும் போது மழைப்பொழிவுக்கு வழிவகுக்கிறது. மேலும் லேசான மழைக்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. மேலும் மேகமூட்டமான வானம் காரணமாக நாட்கள் தொடர்ந்து சூடாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிக பகல் வெப்பநிலை சங்கமம் மற்றும் குவிப்பு மண்டலம் தெற்கு நோக்கி நகர்ந்து வருவதால் ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

ஜனவரி கடைசி வாரத்தில் இருந்து, நகரம் சூடான பகல்கள் மற்றும் வெப்பமான இரவுகளை அனுபவித்து வருகிறது. சனிக்கிழமையன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் 31.8°C-யும், மீனம்பாக்கத்தில் 32.2°C-யும் பதிவானது.

இரவு நேரங்களிலும் வெப்பநிலை 24°C-யை ஒட்டியுள்ளது. இது வழக்கத்தை விட வெப்பமானது. தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இரவுகள் குளிராக இருக்கின்றன. சனிக்கிழமையன்று மீனம்பாக்கம் குறைந்தபட்ச வெப்பநிலை 22°C ஆகவும், நுங்கம்பாக்கம் குறைந்தபட்ச வெப்பநிலை 23.4°C ஆகவும் பதிவாகியுள்ளது.

பிப்ரவரி 13 க்குப் பிறகு, சுமார் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை ஒன்று அல்லது இரண்டு டிகிரி குறையும் என்று எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Published by:Sankar
First published:

Tags: Weather Update

அடுத்த செய்தி