சென்னையின் தாகம் தணிக்க வருகிறது ’தண்ணீர் எக்ஸ்பிரஸ்’

ரயிலில் ஒரு வேகனில் 54,000 லிட்டர் தண்ணீர் என்ற அடிப்படையில், ஒரு முறை 27 லட்சம் லிட்டர் நீரை கொண்டுவர முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Web Desk | news18
Updated: July 11, 2019, 12:17 PM IST
சென்னையின் தாகம் தணிக்க வருகிறது ’தண்ணீர் எக்ஸ்பிரஸ்’
’தண்ணீர் எக்ஸ்பிரஸ்’
Web Desk | news18
Updated: July 11, 2019, 12:17 PM IST
ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக, ரயில் வேகன்களில் தண்ணீர் நிரப்பி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் உபரி நீரை ரயில் மூலமாக சென்னைக்கு கொண்டுவர உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் அறிவித்தார்.

சுமார் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்காக, மேட்டுசக்கரகுப்பத்தில் இருந்து ஜோலார்பேட்டை வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.

அப்போது, குழாயிலிருந்து நீர் வெளியேறியது. இதையடுத்து, குழாயில் உள்ள பழுதுகள் சரிசெய்யப்பட்டன. திட்டப்பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், ரயில் வேகன்களில் நீரை நிரப்பிய அதிகாரிகள், தண்ணீர் நிரப்ப எத்தனை மணி நேரம் ஆகிறது என்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ரயில்வே நிர்வாகத்தின் அனுமதி பெற்றவுடன் தண்ணீர் நிரப்பப்பட்ட ரயில், வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு சென்றடையும் எனவும், பின்னர் அங்கிருந்து குழாய்கள் மூலம் கீழ்பாக்கம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஒரு வேகனில் 54,000 லிட்டர் தண்ணீர் என்ற அடிப்படையில், ஒரு முறை 27 லட்சம் லிட்டர் நீரை கொண்டுவர முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Loading...
மேலும் படிக்க... அழிவின் விளிம்பில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய ஏரி!




அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...