தலைமைச் செயலகத்தையும் தண்ணீர் பஞ்சம் விட்டு வைக்கவில்லை!

தலைமைச்செயலகம் மட்டுமின்றி சென்னையில் பல அரசு அலுவலகங்களிலும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Web Desk | news18
Updated: June 14, 2019, 4:14 PM IST
தலைமைச் செயலகத்தையும் தண்ணீர் பஞ்சம் விட்டு வைக்கவில்லை!
தலைமைச் செயலகம்
Web Desk | news18
Updated: June 14, 2019, 4:14 PM IST
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் தலைநகரில் உள்ள தலைமைச் செயலகத்தையும் விட்டுவைக்கவில்லை.

சென்னை தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவியாளர் முதல் உயர் அதிகாரிகள் வரை சுமார் 6,500 அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த வளாகத்தில் தலைமைச் செயலகத்தின் 3 மாடிகளிலும், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 மாடிகளிலும் பல்துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நாள்தோறும் வந்து செல்வதால் கழிவறை மற்றும் குடிநீருக்கு தண்ணீர் அத்தியாவசியத் தேவையாக உள்ளது. சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்னை தலைமைச் செயலகத்தையும் விட்டுவைக்கவில்லை.

மாநிலத்தின் தலைமை அலுவலகம் என்பதால் முன்னுரிமை அளிக்கப்பட்டு லாரிகள் மூலம் நாள்தோறும் தண்ணீர் வழக்கப்பட்டு வந்த நிலையில், தண்ணீர் தட்டுப்பாடால் தலைமைச் செயலகத்திற்கும் தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு தீர்வு காண தலைமைச்செயலக வளாகத்தில் 6 இடங்களில் ஆழ்துளைக் குழாய்கள் அமைத்துள்ளனர் தலைமைச்செயலக ஊழியர்கள் சங்கத்தினர். இதனால் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி கூறுகிறார்.

நாமக்கல் கவிஞர் மாளிகையில் போதிய அளவிற்கு தண்ணீர் தொட்டிகள் உள்ளதாகவும், தலைமைச்செயலக பழைய கட்டடத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறும் பீட்டர் அந்தோணிசாமி, சென்னையில் தண்ணீர் பாற்றாக்குறைய போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.

தலைமைச்செயலகம் மட்டுமின்றி சென்னையில் பல அரசு அலுவலகங்களிலும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Loading...
Also see...  தண்ணீர் மோசடியை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலர் அடித்து கொலை: பதற வைக்கும் பின்னணி

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...