ஐ.டி. நிறுவனங்கள் மிகுந்துள்ள ஓ.எம்.ஆர் சாலையில் தண்ணீர் பஞ்சம்... விடுதிகளை காலி செய்யும் இளைஞர்கள்...!

கிணறுகளில் உள்ள நீரைப் பயன்படுத்துவதால் தோல் நோய் பிரச்சினைகள் ஏற்படுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஐ.டி. நிறுவனங்கள் மிகுந்துள்ள ஓ.எம்.ஆர் சாலையில் தண்ணீர் பஞ்சம்... விடுதிகளை காலி செய்யும் இளைஞர்கள்...!
சென்னை மாநகரத்தின் மிக முக்கியமான இடங்களில் கூட தண்ணீர் பஞ்சம்
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:55 PM IST
  • Share this:
சென்னையில் ஐ.டி., நிறுவனங்கள் மிகுந்துள்ள சென்னை மகாபலிபுரம் சாலையையும் கூட, தண்ணீர் பஞ்சம் விட்டுவைக்கவில்லை.சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தின் சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறையே தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் இல்லாததால் விடுதியை காலி செய்யும் இளைஞர்கள்

சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக அளவில் இருக்கும் பகுதியாக சென்னை பழைய மகாபலிபுரம் சாலை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள துரைப்பாக்கத்தில் தண்ணீர் பஞ்சம் வாட்டிவதைத்து வருகிறது. குமரன் குடில் பகுதியில் உள்ள ஆண்கள் விடுதி ஒன்றில் முறையாக தண்ணீர் விநியோகிக்கப்படாததால், அங்கு தங்கியிருந்த 30 பேரில் 10 பேர் விடுதியை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர்.


தனியார் லாரிகளில் ரூ.3,000-க்கு தண்ணீர் விற்பனை

வீடுகளுக்கு மெட்ரோ சார்பில் தண்ணீருக்கு முன்பதிவு செய்தால், 15 நாட்களுக்கு ஒரு முறையே வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மெட்ரோ வாரியம் சார்பில் ஒரு லாரி தண்ணீர், 910 ரூபாய்க்கும், தனியார் லாரிகளில் 3,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

வீடுகளின் கிணறுகளில் உள்ள நீரைப் பயன்படுத்துவதால் தோல் நோய் பிரச்சினைகள் ஏற்படுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குடிநீர் இணைப்பு கூட முறையாக வழங்கப்படவில்லை என்பதும் பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

Also see... தண்ணீர் தட்டுப்பாட்டால் முடங்கிய கட்டுமானப் பணிகள்

Also see... 
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading