சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு: தண்ணீரை திருடும் கும்பல்- அரசு நடவடிக்கை எடுக்குமா?

பொதுமக்களுக்கு, ஒரு லோடு லாரி தண்ணீர் 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு: தண்ணீரை திருடும் கும்பல்- அரசு நடவடிக்கை எடுக்குமா?
பொதுமக்களுக்கு, ஒரு லோடு லாரி தண்ணீர் 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:56 PM IST
  • Share this:
சென்னையில் நாளுக்கு நாள் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. தண்ணீரின் தேவை அதிகரிக்க அதிகரிக்க அதனை வைத்து நடத்தப்படும் மோசடிகளும் அதிகரித்துள்ளன. 

தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் தலைநகர் சென்னையின் பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீரை எடுக்க பல வரையறைகள் உள்ளன. இருந்தபோதிலும், தண்ணீர் தட்டுப்பாட்டை கணக்கில் வைத்து சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இருந்தும், அனுமதி இல்லாமல் அமைக்கப்படும் ஆழ்துளை கிணறுகளில் இருந்தும், விடிய விடிய தண்ணீர் திருட்டு நடைபெறுவதாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னையின் புறநகர் பகுதிகளில் ஆய்வு செய்தது நமது குழு.

சென்னை புறநகரை ஒட்டிய பகுதிகளான மேடவாக்கம், மாம்பாக்கம் போன்ற பகுதிகளில் சில ஏரிகளில், அடர்ந்த புதருக்கு நடுவே சில மின்மோட்டார்கள் மூலமாக தண்ணீர் உறிஞ்சப்படுகிறது, அது அதிர்ச்சி அளிக்கிறது.


இதேபோல், ஏரிக்கரைகளில் ஒரே இடத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, அதில் 500 மீட்டர் குழாய்களை அமைத்து எடுக்கப்படும் தண்ணீரை மறைமுகமாக விற்று வருகின்றனர். இதேபோன்று, திருட்டுத்தனமாக எடுக்கப்படும் தண்ணீரை விற்பதை இந்தப் பகுதியில் ஏராளமானோர் குடிசை தொழில் போல செய்து வருவதையும் நம்மால் பார்க்க முடிந்தது.

குழாய்கள் அமைத்து திருடப்படும் குடிநீர்


விவசாயத்திற்காக அரசு கொடுக்கும் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி மின் மோட்டார்கள் மூலமாக எடுக்கப்படும் தண்ணீர் 900 ரூபாய் வரை லாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அங்கிருந்து பொதுமக்களுக்கு, ஒரு லோடு லாரி தண்ணீர் 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர், ஆவடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாயப் பகுதிகளுக்கும் சென்று நமது குழுவினர் பார்த்தனர். அங்கு வாழை தோட்டம், தென்னந் தோப்பு போன்ற விவசாய நிலங்களிலேயே ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் திருடி விற்கப்படுகின்றது.

இரக்கமே இல்லாமல் தண்ணீர் திருடும் கும்பல்


தண்ணீர் தேவை அதிகரித்திருப்பது உண்மைதான். அதற்காக இது போன்று இரக்கமே இல்லாமல் தண்ணீர் திருடும் கும்பல்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா??? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Also see... குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துக! குடிநீர் வடிகால் வாரியம் வேண்டுகோள்

Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading