Home /News /tamil-nadu /

சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல! மத்திய தர நிர்ணய ஆணையம் அறிவிப்பு

சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல! மத்திய தர நிர்ணய ஆணையம் அறிவிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

சென்னையில் விநியோகிக்கப்படும் தண்ணீர் நேரடியாக குடிக்க ஏற்றதல்ல என்று மத்திய தர நிர்ணய ஆணையம் வெளியிட்டு உள்ள விரிவான ஆய்வு அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 21 நகரங்களில் மத்திய நுகர்வோர் நலத்துறை கீழ் இயங்கும் இந்திய தர நிர்ணய ஆணையம் ஆய்வு செய்தது. இதில் 20 நகரங்களின் தண்ணீர் முழுமையாக குடிப்பதற்கு ஏற்ற நிலையில் இல்லை என்று தெரிவித்து உள்ளது.

44 வகையான பரிசோதனைகள் நடத்தியதில் குடிப்பதற்கு இயலாத வேதிப் பொருட்கள் இருந்தால் அவை நேரடியாக குடிக்க இயலாத தண்ணீர் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.  இதில், முதலிடத்தில் டெல்லி நகரமும், முழுமையாக குடிக்க ஏற்றதாக மும்பை குடிநீரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக சென்னையில் முகப்பேர், அயனாவரம், பெரம்பூர், கொளத்தூர், கிண்டி, வேளச்சேரி, அடையாறு, சோழிங்கநல்லூர், தியாகராய நகர், எழும்பூர் ஆகிய 10 இடங்களில் மெட்ரோ குடிநீர் வாரியம் விநியோகிக்கும் தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவை முழுவதும் குடிக்க ஏற்றது அல்ல என்று விரிவான அறிக்கையில் தெரிவித்து உள்ளது ஆணையம்.

புளோரைடு, கலிபார்ம், அம்மோனியா, இ கொலி மற்றும் TDS என்று சொல்லப்படும் கரையும் திட பொருட்கள் ஆகியவை இருப்பதாகவும், அதனால் அவை குடிக்க ஏற்றது அல்ல என்றும் தெரிவித்து உள்ளது.

Also see:

Published by:Karthick S
First published:

Tags: Water

அடுத்த செய்தி