சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் திறப்பு

பூண்டி

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து 140 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 21ம் தேதி சாய் கால்வாய் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர், பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்துக்கு வருவதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

  இந்நிலையில் சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக, விநாடிக்கு 140 கனஅடி வீதம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  Also read... மத்திய அரசுக்கு ₹ 2,400 கோடியை செலுத்தாமல் உள்ள விமான சேவை நிறுவனங்கள்

  கண்டலேறு அணையில் இருந்து பூண்டி நீர்த்தேக்கத்துக்கு விநாடிக்கு 620 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், நீர்மட்டம் 27 புள்ளி 20 அடியாக உள்ளது. இதற்கிடையே, பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் நீர் இருப்பு 5 டி.எம்.சியை நெருங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  Published by:Vinothini Aandisamy
  First published: