சென்னை வந்தடைந்தது தண்ணீர் எக்ஸ்பிரஸ்!

இதற்கிடையே, தண்ணீர் வேகன்கள் கொண்ட மற்றொரு ரயில் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு வந்துள்ளது.

சென்னை வந்தடைந்தது தண்ணீர் எக்ஸ்பிரஸ்!
புறப்பட்டது தண்ணீர் எக்ஸ்பிரஸ்!
  • News18
  • Last Updated: August 24, 2019, 1:43 PM IST
  • Share this:
சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் ரயில், தனது முதல் பயணத்தை நிறைவு செய்துள்ளது.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் உபரி நீரை ரயில் மூலமாக சென்னைக்கு கொண்டுவர உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் அறிவித்தார்.

சுமார் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்காக, மேட்டுசக்கரகுப்பத்தில் இருந்து ஜோலார்பேட்டை வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கான சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.


அப்போது, குழாயிலிருந்து நீர் வெளியேறியது. இதையடுத்து, குழாயில் உள்ள பழுதுகள் சரிசெய்யப்பட்டன. திட்டப்பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், ரயில் வேகன்களில் நீரை நிரப்பிய அதிகாரிகள், தண்ணீர் நிரப்ப எத்தனை மணி நேரம் ஆகிறது என்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டனர்.

நேற்று ரயில்வே நிர்வாகத்தின் அனுமதி கிடைத்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு ரயில், ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டது. அதிகாரிகள் கொடியசைத்து ரயிலை தொடங்கி வைத்தனர்.

4 மணி நேரத்தில் தண்ணீர் நிரப்பப்பட்ட ரயில், வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு சென்றடையும் எனவும், பின்னர் அங்கிருந்து குழாய்கள் மூலம் கீழ்பாக்கம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், ஒரு வேகனில் 54,000 லிட்டர் தண்ணீர் என்ற அடிப்படையில், ஒரு முறை 27 லட்சம் லிட்டர் நீரை கொண்டுவர முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

4.30 மணி நேர பயணத்திற்கு பிறகு தண்ணீர் ரயில் சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து தண்ணீர், குழாய்கள் மூலமாக கீழ்பாக்கம் சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

இதற்கிடையே, தண்ணீர் வேகன்கள் அடங்கிய மற்றொரு ரயில் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு வந்துள்ளது. இந்த இரு ரயில்களும் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வர பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published: July 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading