வாக்காளர் பட்டியலில் தவறு உள்ளதா? எளிமையாக திருத்தம் செய்ய ஸ்மார்ட்போன் ஆப் அறிமுகம்

வாக்காளர் பட்டியலில் தவறு உள்ளதா? எளிமையாக திருத்தம் செய்ய ஸ்மார்ட்போன் ஆப் அறிமுகம்
செல்போன்
  • News18
  • Last Updated: September 1, 2019, 1:18 PM IST
  • Share this:
வாக்களர்கள் தங்களுடைய வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை சிறப்பு செயலி அவர்களே மூலம் திருத்திகொள்ளும் திட்டத்தை சென்னை அடையாறு மண்டல அலுவலகத்தில் சென்னை மாநாராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “ஆண்டிற்கு ஒருமுறை வாக்களர் பட்டியலை சரிபார்ப்பது வழக்கமான ஒன்று. இந்தாண்டு ஒவ்வொரு பூத்திற்கும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3600 பூத் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேரடியாக அந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று வாக்களர் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.


இந்த வருடம் புதிதாக வாக்களர்களுக்கு ஒரு புதிய வசதியை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது, மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் 'Voter help line' செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் திருத்தங்களை தாங்களே மேற்கொள்ளலாம்.

செயலியை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு உதவும் வகையில் உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன
வார்டு அலுவலகங்களிலும், இ-சேவை மையங்களிலும் இந்த உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது சென்னையில் 210 மையங்கள் உள்ளன.

Loading...

ஆன்லைன் மூலம் மட்டுமல்லாமல் படிவம் மூலமும் மாற்றியமைத்து கொள்ளலாம். வாக்களர்கள் அவர்களுடைய விவரங்களை தெரிந்து கொள்ள கூடுதலாக இந்த ஆண்டு முதல் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாக்களர்கள் திருத்தப்பட வேண்டிய விவரங்களை செயிலியில் பதிவேற்றம் செய்த 15 நாட்களில் அந்த விவரங்கள் மாற்றப்படும். இந்த செயலி மக்களுக்கு எளிதாக பயன்படும் வகையில் அதாவது, சோமோட்டோ, ஸ்விகி செயலிகளை பயன்படுத்துவது போல எளிமையாக பயன்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப பிரிவினர் வடிவமைத்து என்று கூறினார்.

வீடியோ பார்க்க: கல்லூரி வளாகத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

First published: September 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com