அண்ணனிடம் பந்தயம்: 29 மாடிக் கட்டடத்தின் வெளிப்புற விளிம்பில் நடந்த 15 வயது சிறுமி - அச்சமூட்டும் வீடியோ

சென்னை நாவலூர் அருகே 29 மாடி குடியிருப்பின் பக்கவாட்டில் சிறுமி ஒருவர், அண்ணனிடம் பந்தயம் கட்டி நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Share this:
சென்னை நாவலூர் அருகே பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஏகாட்டூர் பகுதியில் 29 அடுக்குகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. அங்கு வசித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர், மாடியின் பக்க வாட்டில் உள்ள வெளிப்புற விளிம்பில் நடந்து சென்றுள்ளார். இதனை அங்கு இருந்த ஒருவர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கேளம்பாக்கம் காவல்நிலைய போலீசார், அபாயகரமான சாகச செயலில் ஈடுபட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில் தனது அண்ணனிடம் பந்தயம் கட்டியதால், இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக கூறினார்.எனினும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: August 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading