கடந்த 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி சென்னை உருவானதாக கூறப்படுகிறது. இதனை கொண்டாடும் விதமாக கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு சென்னை தினம் 22ஆம் தேதி கொண்டாடப்படும் வகையில் சென்னையின் புராதான கட்டங்கள், சென்னையின் அழகியல் பேசும் புகைப்படங்கள் கொண்ட சென்னை 2 மெட்ராஸ் புகைப்பட புத்தக வெளியீட்டு விழா சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள தி ஆர்ட் வளாகத்தில் நடைபெற்றது.
ஊரடங்கின் போது பிரபல புகைப்பட கலைஞர் எல்.ராமசந்திரன் எடுத்த புகைப்படங்கள் புத்தகமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் மூத்த பத்திரக்கையாளர் என்.ராம், நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் பார்திபன், ஆகியோர் கலந்துகொண்டனர் புகைப்பட புத்தக தொகுப்பை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் பெற்றுக்கொண்டார்.
நிகழ்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, சென்னையின் புகைப்படங்களை பார்கும்போது சென்னைக்கு இத்தனை பெருமை இருக்கிறதா? என ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக தெரிவித்தார். அறிவுதான் கடவுள் எனவும் அறிவின் பார்வை முக்கியமானது என குறிப்பிட்ட விஜய் சேதுபதி ஊரடங்கால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் இருந்து மீண்டும் மீண்டுவரவேண்டும் எனவும் கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய இயக்குநர் பார்த்திபன், ஊரடங்கு அனைவருக்கும் பழகிவிட்டதாகவும், நல்ல செய்தியை ஊடகங்கள் முந்தி தருவதில் தவறில்லை ஆனால் துக்க செய்தியை யார் முந்தி தருவது என போட்டி போடாமல் நிதானமாக தரவேண்டும் என தெரிவித்தார். மேலும் ஊரடங்கு நேரத்தை புகைப்பட கலைஞர் ராமசந்திரன் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டதாகவும் பார்திபன் கூறினார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.