நாளை முதல் வணிக வளாகங்கள் செயல்பட அரசு அனுமதி - தயாராகும் வேளச்சேரி பீனிக்ஸ் மால்

நாளை முதல் வணிக வளாகங்கள் முழுமையாக செயல்பட அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மால் திறக்கப்படவுள்ளது.

நாளை முதல் வணிக வளாகங்கள் செயல்பட அரசு அனுமதி - தயாராகும் வேளச்சேரி பீனிக்ஸ் மால்
ஷாப்பிங் மால் (கோப்புப்படம்)
  • Share this:
வணிக வளாகத்திற்கு வரும் அனைவரும் பயன்படுத்த நுழைவாயிலிலும், அனைத்துக் கடைகளிலும் கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைப் பின்பற்ற ஒரு நேரத்தில் 13,200 பேர் மட்டும் உள்ளே செல்லக்கூடிய வகையில் அதனைக் கண்காணிக்கும் கருவி பொருத்தப்பட்டு மானிட்டர் மூலமாகக் கண்காணிக்கப்படுகிறது.

Also read: வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலரின் குடும்பத்திற்கு ₹ 86.5 லட்சம் நிதி வழங்கிய சக காவலர்கள்

13,200 பேருக்கு மேல் வந்தால் அவர்கள் காத்திருப்பதற்கான நீண்ட இடமும் தயார் நிலையில் உள்ளது. மேலும், வணிக வளாகத்திற்கு வரும் நபர்கள் கொண்டு வரும் பைகள் UV ஸ்கேன்னர் மூலமாக பரிசோதிக்கப்பட உள்ளன. அதன் மூலம் வைரஸ் உள்ளிட்ட கிருமிகள் உள்ளனவா என்பது கண்டறியப்பட உள்ளது.


Touch-less payment வசதி அனைத்துக் கடைகளிலும் இடம்பெற்றுள்ளது. யாரும் யாரையும் தொடாமல் சமூக இடைவெளியைப் பின்பற்ற இந்த வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வணிக வளாகம் முழுவதும் தொடர்ந்து கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என வணிக வளாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading