• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Cyclone Nivar | சென்னை-புதுச்சேரி இடையே கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்லத் தடை.. விழுப்புரம் எஸ்.பி. உத்தரவு..

Cyclone Nivar | சென்னை-புதுச்சேரி இடையே கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்லத் தடை.. விழுப்புரம் எஸ்.பி. உத்தரவு..

கோப்பு படம்

கோப்பு படம்

கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்கள் செல்லக்கூடாது என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்

  • Share this:
    புயல் காரணமாக புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராமங்களில் கடல் அலை கடுமையான சீற்றத்துடன் வீசத் தொடங்கி இருக்கிறது.

    இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்படுகிறது என்று காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    மேலும் படிக்க.. Cyclone Nivar: கடலூரில் இருள் சூழ்ந்தது - காற்றுடன் கனமழை

    மேலும் இருசக்கர வாகனங்கள் கூட கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்ல கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி கடலோரப் பகுதியில் உள்ள இடங்கள் கடல் சீற்றத்தின் காரணமாக பாதிக்கப்படக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கீழ்புத்துப்பட்டு பகுதியில் இருந்து கோட்டக்குப்பம் வரை கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: