கோயம்பேடு சந்தையில் காய்கனிகளின் விலை கடும் சரிவு..!

3,000  டன் காய்கனிகள் மட்டுமே போதுமானதாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு சந்தையில் காய்கனிகளின் விலை கடும் சரிவு..!
கோப்புப் படம்
  • Share this:
கோயம்பேடு சந்தையில் தேவைக்கு அதிகமாக காய்கனிகள் வந்து இருப்பதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 5,000 டன் காய்கனிகள்  வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக பெருநிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு இருப்பதால் 3,000 டன் காய்கனிகள் மட்டுமே போதுமானதாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், காய்கறிகளின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்த காய்கறிகளில் சாம்பார் வெங்காயம் 75 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் அதிகபட்சமாக 26 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 16 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


உருளைக்கிழங்கு 23 ரூபாய், காரட் 15 ரூபாய், பீன்ஸ் 50 முதல் 60 ரூபாய், பீட்ரூட் 12 ரூபாய், கத்திரிக்காய் 30 ரூபாய் வரை விற்பனையாகின்றன. வெண்டைக்காய் 20 ரூபாய்க்கும் முட்டை கோஸ் 8 ரூபாய்க்கும், காளிஃபிளவர் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Also see...இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading