வைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

news18
Updated: August 19, 2019, 5:10 PM IST
வைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
வைகோ
news18
Updated: August 19, 2019, 5:10 PM IST
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மீண்டும் உடல் நலைக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரத்தில் கலந்து கொள்ள நேற்று மதுரை செல்லும் போது குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து மருத்துவரகள் கூறிய அறிவுரைப்படி மதுரையில் இருந்து இன்று சென்னை திரும்பினார்.

இந்நிலையில், மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட சென்னை விமான நிலையம் வந்த வைகோ அங்கிருந்து நேராக சிகிச்சைக்காக போரூரில் உள்ள இராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இது தொடர்பாக மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுச்செயலாளர் வைகோ உடல் நிலை சீராக இருப்பதாகவும் இரண்டு வார காலம் ஓய்வு தேவைப்படுவதால் தொண்டர்கள் யாரும், நேரில் பார்க்க வந்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

First published: August 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...