சென்னை- கீழ்ப்பாக்கம்: மதபோதகர்கள் மீது பாலியல் தொல்லை வழக்கு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

கிறி்ஸ்தவ மத அமைப்பில் பணியாற்றிய மதபோதகர்கள், பள்ளிச் சிறுமியரிடம் சமூக வலைதளம் மூலம் ஆபாசமாக உரையாடியதாக எழுந்த புகாரில், அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

  • Share this:
பள்ளிக் குழந்தைகளிடம் மதம் தொடர்பான வகுப்புகள் எடுக்க வேண்டிய போதகர் சாம் மற்றும் ரூபன் கிளமென்ட் என்ற இருவரும், அவர்களுடன் ஆபாசமாக உரையாடியுள்ளனர். 2 மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இப்போது அம்பலமாகி வழக்குப் பதிவு வரை சென்றுள்ளது. சென்னை அயனாவரத்தில் ஸ்கிரிப்ச்சர் யூனியன் அண்டு சில்ரன் ஸ்பெஷல் சர்வீஸ் மிஷன் கவுன்சில் ஆப் இந்தியா என்ற கிறிஸ்தவ மத போதக அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில், கீழ்ப்பாக்கத்தில் வசித்து வரும் சாமுவேல் ஜெய்சுந்தர், ரூபன் கிளமென்ட், ஆல்பர்ட் மற்றும் ஜேனட் எபனேசர் ஆகியோர் மதபோதகர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

மிஷனின் ஆங்கில மொழிப் பிரிவு செயலாளராகப் பணியாற்றி வந்த சாமுவேல் ஜெய்சுந்தர், வேலுாரில் பணியாற்றி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம், வேலுாரில் அவரிடம் படித்து வந்த 19 வயது இளம்பெண், சாமுவேல் குறித்து தலைமையகத்திற்குப் புகாரளித்துள்ளார். அதில், தனது முகநுால் மெசஞ்சரில் சாமுவேல் ஜெய்சுந்தர் ஆபாசமாக உரையாடியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மிஷன் நிர்வாகிகள் நடத்திய விசாரணையில், சாமுவேல் ஜெய்சுந்தர், ரூபன் கிளமென்ட், ஆல்பர்ட் மற்றும் ஜேனட் எபனேசர் ஆகியோர் இதேபோல் பள்ளிச் சிறுமியரிடம் ஆபாசமாக உரையாடியது தெரியவந்தது. 2 மாதங்கள் கழிந்த நிலையில், இந்த சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால், ஸ்க்ரிப்ச்சர் மிஷன், உடனடியாக சாமுவேல் ஜெய்சுந்தரை பணியிடை நீக்கம் செய்வதாக அறிக்கை வெளியிட்டது.


மேலும் படிக்க...வாட்ஸ் அப் மூலம் புடவை விற்பனை: பெண்களை எச்சரிக்கும் பகீர் ரிப்போர்ட்

மேலும், ரூபன் கிளமென்ட், ஆல்பர்ட் மற்றும் ஜேனட் எபனேசர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக, சென்னை காவல் ஆணையருக்கு ஆன்லைனில் ஒருபுகாரையும் அந்த மிஷன் அனுப்பியது.புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தும் படி அயனாவரம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி மதபோதகர்கள் சாமுவேல் ஜெய்சுந்தர், ரூபன் கிளமென்ட் ஆகியோர் மீது பாலியல் தொல்லை கொடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தலைமறைவாக இருக்கும் சாமுவேல் ஜெய்சுந்தர் மற்றும் ரூபன் கிளமென்ட் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading