வேளச்சேரி தொகுதியை கைப்பற்ற கடும் போட்டி: காய் நகர்த்தும் வாகை சந்திரசேகர் - மகேஷ்

திமுக எம்.எல்.ஏ.வாகை சந்திரசேகருக்கும் தலைமை செயற்குழு உறுப்பினர் மகேஷூக்கும் இடையே வேளச்சேரி தொகுதியைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேளச்சேரி தொகுதியை கைப்பற்ற கடும் போட்டி: காய் நகர்த்தும் வாகை சந்திரசேகர் - மகேஷ்
மகேஷ் குமார் | வாகை சந்திரசேகர்
  • Share this:
சென்னை மாநகரில் உள்ள வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இத்தொகுதியில் தென் மாவட்டங்களில் இருந்து குடியேறிய மக்கள் கணிசமான அளவில்  வாக்காளர்களாக உள்ளனர். தற்போதைய வேளச்சேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக திமுக நட்சத்திர பேச்சாளர் நடிகர் வாகை சந்திரசேகர் உள்ளார்.  அவரே மீண்டும்  இத்தொகுதியில் போட்டியிட முயற்சித்து வருகிறார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள தொகுதிகளில் ஐபேக்  நிறுவன செயல்பாடுகள் குறித்தும், கட்சி நிர்வாகிகளிடம் சட்டமன்ற உறுப்பினர்களின் அணுகுமுறை, தற்போது தொகுதி மக்களிடம் அவர்களுக்கு உள்ள செல்வாக்கு குறித்து சர்வே எடுத்து தலைமைக்கு அனுப்பி உள்ளனர். சர்வே முடிவு நடிகர் சந்திரசேகருக்கு நெகடிவ்வாக இருந்தாலும், திமுக தலைமையில் உள்ள நெருக்கத்தை வைத்து மீண்டும் சீட் பெற்று வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

இந்நிலையில் வேளச்சேரி தொகுதியில் சீட் பெற திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ள மகேஷ்குமார் கடும் முயற்சியில் இறங்கி உள்ளார். 2011 சட்டமன்றத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த மகேஷ், கடந்த சட்டமன்ற தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனுக்கு ஒதுக்கப்பட்டதால், மகேஷ் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்.


வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன் போட்டியிட வாய்ப்பு அதிகம் உள்ளதால், சைதாப்பேட்டை தொகுதியில் இருந்து மகேஷ்குமார், அருகாமை தொகுதியான வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட கட்சி தலைமையில் உள்ள தன்னுடைய நெருங்கிய தொடர்புகள் மூலம் கடுமையாக முயற்சித்து வருகிறார்.


நடிகர் வாகை சந்திரசேகரும், மகேஷ்குமாரும் இருவருக்கும் உள்ள கட்சி மேலிட தொடர்புகள் மூலம் வேளச்சேரி தொகுதியில் சீட் பெற தற்போதே தீவிரமாக காய் நகர்த்த தொடங்கி உள்ளனர்.
First published: October 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading