ரயில் பயணிகள் கவனத்திற்கு... புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

ரயில் பயணிகள் கவனத்திற்கு... புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

மின்சார ரயில்

சென்னை கடற்கரையிலிருந்து மதியம் 02:30 மணிக்கு மேல் செங்கல்பட்டிற்கு ரயில்கள் இயக்கப்படமாட்டாது.

  • Share this:
    தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வெளியாகி உள்ள செய்திகுறிப்பில்,  சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே குறைந்த அளவிலான ரயில்களே இயக்கப்படும்.

    எனினும் இன்று, சனிக்கிழமை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில், பல்லாவரம் வரை 20 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், தாம்பரம் வரை 45 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், செங்கல்பட்டு வரை 1 மணி நேரத்திற்கு ஒரு ரயிலும் இயக்கப்படும்.

    சென்னை கடற்கரையிலிருந்து மதியம் 02:30 மணிக்கு மேல் செங்கல்பட்டிற்கு ரயில்கள் இயக்கப்படமாட்டாது. அதுபோல, செங்கல்பட்டிலிருந்து மதியம் 02:45 மணிக்கு மேல் சென்னை கடற்கரைக்கு ரயில்கள் இயக்கப்படமாட்டாது.

    நாளை, ஞாயிற்றுக்கிழமை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் காலை 06:30 மணிக்கு மேல் மாலை 03:15 மணி வரை இயக்கப்படும் அனைத்து ரயில்களும் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும். செங்கல்பட்டு- சென்னை கடற்கரை மார்க்கத்தில் காலை 07:40 மணிக்கு மேல் மாலை 04:10 வரை இயக்கப்படும் அனைத்து ரயில்களும் செங்கல்பட்டு/தாம்பரத்திற்கு பதிலாக பல்லாவரத்திலிருந்தே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published: