ஆன்லைன் வகுப்புக்கு மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கினார் உதயநிதி..

மாணவர் சாமுவேல் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள தன்னிடம் செல்போன் இல்லாத காரணத்தினால் புதிய செல்போன் வாங்குவதற்காக, சாக்கடை கழிவகற்றும் பணிசெய்வதாக ஆங்கில நாளிதழில் செய்திவந்தது.

ஆன்லைன் வகுப்புக்கு மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கினார் உதயநிதி..
மாணவர் சாமுவேலுக்கு லேப்டாப் வழங்கினார் உதயநிதி
  • News18 Tamil
  • Last Updated: September 19, 2020, 7:42 AM IST
  • Share this:
திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு  கட்சியின் மூத்த முன்னோடிகள் 100 பேருக்கு பொற்கிழி, புத்தாடை, மளிகைப் பொருட்களை வழங்கினார்.

அப்போது, இன்று காலை சென்னை கொடுங்கையூர் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் சாமுவேல் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள தன்னிடம் செல்போன் இல்லாத காரணத்தினால் புதிய செல்போன் வாங்குவதற்காக, சாக்கடை கழிவகற்றும் பணிசெய்வதாக ஆங்கில நாளிதழில் செய்திவந்தது.அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதை தொடர்ந்து, சாமுவேலின்  ஆன்லைன் வகுப்புக்காக லேப்டாப்-டேட்டா கார்டை சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினருமான சேகர்பாபு ஏற்பாட்டில் திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்..
First published: September 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading