கோயம்பேட்டில் ஆம்னி பேருந்தை கடத்திச் சென்ற நபர்கள் கைது - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்

ரூ.50 லட்சம் மதிப்பிலான பேருந்தை குறைந்த விலையில் வாங்கி கொடுப்பதாக ரூ.50 ஆயிரம் பணத்தை, வாங்கிக்கொண்டு மோசடி செய்த புரோக்கரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோயம்பேட்டில் ஆம்னி பேருந்தை கடத்திச் சென்ற நபர்கள் கைது - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்
கோயம்பேடு
  • Share this:
நாகப்பட்டினம் மாவட்டம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (எ) அப்புகுட்டி (43). கோயம்பேடு ஸ்டேட் பேங்க் அருகே நேற்று இரவு 8.30 மணி அளவில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்தை காணவில்லை என்று கோயம்பேடு பேருந்து நிலைய காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில், ரமேஷ் குமார் UTS டிராவல்ஸ்சில் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதாகவும், கொரானா ஊரடங்கு காரணமாக கோயம்பேடு 100 அடி சாலை SBI பேங்க் அருகில் உள்ள பேருந்து அலுவலகத்துக்கு அருகில் உள்ள பேருந்துகளுக்கு வாட்ச்மேனாக வேலை செய்து வந்ததாகவும், நேற்று மாலை சமைப்பதற்கு காய்கறி வாங்க ஜெய் நகர் பகுதிக்கு சென்றதாகவும் பின் 8-30 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது ஆம்னி பேருந்து காணவில்லை என்றும் அதனை கண்டுபிடித்து தருமாறு கோயம்பேடு பேருந்து வளாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில் பேருந்து செங்குன்றம் சோதனைச் சாவடியை தாண்டி செல்வதாக வந்த தகவலின் அடிப்படையில்  திருவள்ளுவர் மாவட்ட காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  உடனடியாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை பேருந்தை மீட்டு அதில் இருந்த பெரிய பாளையம்பகுதியைச் சேர்ந்த அருண் குமார்(36), கார்த்திக்(32) ஆகிய இருவரையும் பிடித்து கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோயம்பேடு


இருவரிடம் நடத்திய விசாரணையில் அருண்குமார் என்பவர் யுடிஎஸ்(UTS) பேருந்து நிறுவனத்தின் மேனேஜர் என நினைத்து புரோக்கர் சந்திரன் என்பவரிடம் பேருந்து வாங்க ரூபாய் 50,000 கொடுத்ததாகவும் ஒப்பந்தத்தின்படி புரோக்கர் சந்திரன் இதுநாள் வரையில் பேருந்தும் வாங்கித் தரவில்லை. மேலும், கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றிய கோவத்தில் பேருந்தை கடத்திச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். ரூ.50 லட்சம் மதிப்பிலான பேருந்தை குறைந்த விலையில் வாங்கி கொடுப்பதாக ரூ.50 ஆயிரம் பணத்தை, கொடுத்ததாகவும் விசாரணையில் கூறியுள்ளனர்.

தற்போது பணம் பறித்த புரோக்கர் சந்திரனை தேடி வருகின்றனர். மேலும் பேருந்தை கடத்திய நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading