திருநங்கைகள் உறுப்பினர் ஆகலாம்...! திமுகவில் விதி திருத்தம்

திருநங்கைகள் உறுப்பினர் ஆகலாம்...! திமுகவில் விதி திருத்தம்
மு.க.ஸ்டாலின்
  • News18
  • Last Updated: November 10, 2019, 3:35 PM IST
  • Share this:
திமுக பொதுக்குழுவில் கட்சியின் பல விதிகளை திருத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், முதன்முறையாக இன்று பொதுக்குழு கூட்டம் கூடியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு, சட்டமன்ற, நாடாளுமன்ற, மாவட்ட செயலாளர்கள் என 4,400 பேர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், திமுக தலைவரின் தனி சிறப்பு தீர்மானம் உட்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருநங்கைகளை கட்சியில் உறுப்பினராக சேர்க்கலாம், இளைஞர் அணியில் சேர்வதற்கான வயது வரம்பை 35-ஆக உயர்த்துவது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


மேலும், அனைத்து நிர்வாகிகள் தலைமைக் கழக நிர்வாகிகள் எடுக்கும் முடிவை மாற்றக் கூடிய அதிகாரம், கட்சியில் ஒருவரை உறுப்பினராக சேர்க்க, நீக்கும் அதிகாரம் என பொதுச்செயலாளருக்கு உள்ள அதிகாரம் திமுக தலைவருக்கும் வழங்கப்பட்டது.

இளைஞரணி பொறுப்பில் இருப்பவர்கள் திமுகவில் வேறு பொறுப்புகள் வகிக்க முடியாது என்றும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களை திமுகவில் உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டு அங்கேயே கிளை அமைப்பு செய்து கொள்ளலாம் என்றும் விதி திருத்தம் செய்யப்பட்டது.

அகில இந்திய கட்சியாக தரம் உயர்த்தும் வகையில் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உறுப்பினர்களை சேர்த்து தமிழகத்தைப் போலவே அங்கும் செயற்குழு, பொதுக்குழு அமைத்துக் கொள்ளலாம் என்றும் விதி திருத்தம் செய்யப்பட்டது.
First published: November 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்