விபத்து குறித்து ஜூலை 30ம் தேதி விசாரணை தொடங்கப்படும் - ரயில்வே பாதுகாப்பு ஆணையர்

விபத்து குறித்து ஜூலை 30ம் தேதி விசாரணை தொடங்கப்படும் - ரயில்வே பாதுகாப்பு ஆணையர்
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகர்
  • News18
  • Last Updated: July 25, 2018, 2:31 PM IST
  • Share this:
பரங்கிமலை ரயில் விபத்து குறித்து வரும் 30ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என மத்திய தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகர் தெரிவித்துள்ளார்.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று நடந்த விபத்து தொடர்பாக மத்திய தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். நான்கு பேர் கொண்ட பாதுகாப்பு ஆணையத்தின் குழுவுடன் பெங்களூருவில் இருந்து வந்த அவர், தண்டவாளத்துக்கும் தடுப்புச் சுவருக்கும் உள்ள இடைவெளி, ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது உள்ள இடைவெளி ஆகியவற்றை அளவு எடுக்கும் பணியில் ஈடுபட்டார். மேலும் ரயில் நிலையத்தின் ப்ளூ பிரிண்ட் ஆகியவற்றை கொண்டு விசாரணையை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நேற்று நடந்த ரயில் விபத்து குறித்து ஆய்வு மேற்கொள்ளபட்டதாகவும் வரும் 30ம் தேதி விபத்து குறித்து விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் விபத்து குறித்து ரயில்வே காவல் படை அதிகாரிகளிடம் தகவல்களைக் கேட்டுப் பெற்று சம்பவம் நடைபெற்றபோது இருந்தவர்கள் அளித்த வாக்கு மூலங்கள் ஆகியவற்றை கொண்டு விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும் இந்த விபத்து தொடர்பாக பொதுமக்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்க முன் வரலாம் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பொது மக்கள் விழிப்புணர்வுடன் பயணம் செய்ய வேண்டும் என்றும் தடுப்புச்சுவரை அகற்றுவது குறித்து சென்னை ரயில்வே கோட்டத்திற்கு பாதுகாப்பு குழு பரிந்துரை வழங்கிய பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த ஆய்வின் போது ரயில்வே காவல் படை துணை ஆணையர் லூயிஸ் அமுதன், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் நவீன் குலாட்டி ஆகியோர் இருந்தனர்.
First published: July 25, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading