விதியை மீறி வாகனம் ஓட்டிய இளம்பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய போலீஸ் எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்...!

விதியை மீறி வாகனம் ஓட்டிய இளம்பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய போலீஸ் எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்...!
மாதிரி படம்
  • News18
  • Last Updated: November 1, 2019, 8:57 AM IST
  • Share this:
வேலூரில் விதியை மீறி வாகனம் ஓட்டிய பெண்ணின் போன் நம்பரை வாங்கி, அவருக்கு நள்ளிரவில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வேலூர் மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் ராஜமாணிக்கம். இவர் ஒரு வாரத்திற்கு முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை வழி மறித்து ஆவணங்களை சரிபார்த்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு அனுப்பியுள்ளார். பின்னர் நள்ளிரவில் அந்தப் பெண்ணின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆபாச வீடியோவை அனுப்பியதாக கூறப்படுகிறது.


இதனை அந்தப் பெண் அவரது உறவினரான அமமுகவின் வேலூர் கிழக்கு மாவட்ட பொருளாளரும், அப்பு பால் நிறுவன உரிமையாளருமான பாலாஜியிடம் கூறியுள்ளார்.

அவர் காவல் உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆபாச வீடியோ அனுப்பியது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அந்த உதவி ஆய்வாளர் தெரியாமல் நடந்துவிட்டது என்றும், இது போன்று இனி நடக்காது என்றும் கூறினார்.

ராஜமாணிக்கத்திடம் பாலாஜி விசாரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவத் தொடங்கியது. இதை அடுத்து, இது குறித்து விசாரிக்க வேலூர் எஸ்.பி. உத்தரவிட்டார். விசாரணையில், அந்த பெண்ணிற்கு ராஜமாணிக்கம் ஆபாச வீடியோ அனுப்பியது உண்மைதான் என்பது தெரிய வந்தது. இதை அடுத்து ராஜமாணிக்கத்தை ஆயுதப்படைக்கு மாற்றி வேலூர் மாவட்ட எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.
First published: November 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்