ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்க முடியாது- அபராதம் விதிக்க இனி புதிய நடைமுறை!

வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்க முடியாது- அபராதம் விதிக்க இனி புதிய நடைமுறை!

லஞ்சம் வாங்கி சிக்கிய போக்குவரத்து காவலர்

லஞ்சம் வாங்கி சிக்கிய போக்குவரத்து காவலர்

சமீபத்தில் அசோக் நகர் போக்குவரத்து ஆய்வாளர் நாகராஜன் வாகன ஓட்டியிடம் மிரட்டி லஞ்சம் கேடுகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கும் போக்குவரத்து காவலர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையில் கடந்த மாதம் 26-ம் தேதியிலிருந்து திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி போக்குவரத்து விதிமுறைகளுக்கான அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகையானது பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர்

இந்த நிலையில் சமீபத்தில் அசோக் நகர் போக்குவரத்து ஆய்வாளர் நாகராஜன் வாகன ஓட்டியிடம் மிரட்டி லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜனக் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜுவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள், போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி  காவல் ஆணையத்தில் நடைபெற்றது.

இதையும் படிங்க: கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமையும் விடுமுறை அறிவிப்பு - முழு விவரம்

மேலும், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர், போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோர்களுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்படது என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், வாகன ஓட்டிகளிடம் ஆபராதம் விதிக்கும் போது கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் காவல் துறை மாண்பை காக்கும் நோக்கோடு செயல்பட வேண்டும் போக்குவரத்து போலீசாருக்கு சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக வாகன ஓட்டிகளிடம் கையூட்டு பெரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல் எச்சரித்துள்ளது. வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்கும் போது கண்டிப்பாக பாடி ஒன் கேமரா (Body One Camera) மூலம் முழுமையாக பதிவு செய்யப்பட வேண்டும் சென்னை காவல்துறை போக்குவரத்து போலீசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

Published by:Arunkumar A
First published:

Tags: Chennai, Traffic Police