காரில் ஹெல்மேட் போடவில்லை என கோவில்பட்டியில் உள்ளவருக்கு அபராதம் விதித்துள்ள சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை நடவடிக்கையால் காரின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் தேன்ராஜா. இவர் ஆக்டிவ் மைண்டஸ் என்ற பெயரில் அரசின் உதவி பெறும் மன நலம்பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகம் நடத்தி வருகிறார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்வதற்கு ஏதுவாக இருக்கும் வகையில் அம்பசிட்டர் காரை பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென அவரது செல்போனுக்கு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் இவருடைய அம்பசிட்டர் கார் எண்ணை பதிவிட்டு ஹெல்மெட் அணியவில்லை ரூ.1000 அபரதாம் விதித்துள்ளதாகவும் வந்துள்ளது. மேலும் அதில் ஒருவர் பைக் ஓட்டிச்செல்லும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:ஆவின் பால் விலை உயர்வு இவர்களுக்கு மட்டும்தான்!
தான் வைத்திருப்பது கார் அதற்கு எப்படி ஹெல்மேட் அபராதம் மற்றும் கோவில்பட்டியில் இருக்கும் தான் சென்னையில் சென்றதாக வந்துள்ளது, புகைப்படத்தில் பைக் படம் உள்ளதால் குழப்பத்தில் உள்ளார். மேலும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை உதவி எண்களுக்கு அழைத்தும் எவ்வித சரியான பதிலும் கிடைக்கவில்லை என்பதால் அதிர்ச்சியில் உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Helmet, Kovilpatti, Traffic Police, Traffic Rules