சீன அதிபர் வருகை... சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சீன அதிபர் வருகை... சென்னையில் போக்குவரத்து மாற்றம்
கோப்பு படம்
  • Share this:
சீன அதிபர் ஷி ஜிங்பிங் வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னை வர உள்ளதால் அந்ந நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை பெருநகர் போக்குவரத்து காவல் துறை வெளியிட்டு பத்திரிகை செய்தியில், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருகையை முன்னிட்டு சென்னை போக்குவரத்தில் வரும் 11 மற்றும் 12ம் தேதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஜி.எஸ்.டி சாலை (விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை), அண்ணாசாலை (கத்திபாரா முதல் சின்னமலை வரை), சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து தாமதமாக செல்ல வாய்ப்புள்ளது.


எனவே மேற்கண்ட சாலைகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பயணதிட்டத்தையும் வழித்தடங்களையும் முன்னேற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.Also Watch

First published: October 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்