ஊரடங்கு இல்லாமல் கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் - வணிகர்கள் கோரிக்கை

மார்க்கெட் - கோப்புப்படம்

சென்னையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் 9 இடங்களில் கடைகள் மூடு பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்தது

 • Share this:
  ஊரடங்கு இல்லாமல் கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த வணிகர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

  சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகையில் ஊரடங்கு தொடர்பாக சென்னையை சேர்ந்த வணிகர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று ஊரடங்கு தொடர்பாக வணிகர்களுடனான கருத்துக்களை கேட்டறிந்தனர்.

  கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக கடந்த வாரம் சென்னையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் 9 இடங்களில் கடைகள் மூடு பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவிப்பு வெளியானது இந்நிலையில், சென்னையை சேர்ந்த வணிகர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு தங்களின் கருத்துக்களை மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்தனர்.

  இந்த ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த பின்னர், தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறுகையில், கொரோனா 3ஆம் அலையை கட்டுப்படுத்துவது குறித்து சென்னையில் உள்ள அனைத்து வணிகர்களும் அழைத்து ஆலோசனை கேட்கப்பட்டது.

  Must Read : அதிகரிக்கும் கொரோனா தொற்று... கடுமையாகிறதா கட்டுப்பாடுகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

  விக்ரமராஜா


  கொரோணா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் வணிகர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதை கட்டாயப்படுத்த வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து வியாபாரம் நடத்த வேண்டும் என்றும் மாநகராட்சி தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் வணிகர்கள் அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் 9 இடங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் சில தளர்வுகள் அறிவித்து ஊரடங்கு இல்லாமல் கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வணிகர்கள் தரப்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஊரடங்கு குறித்து மறு அறிவிப்பில் கடைகளை திரப்பதற்க்கான அறிவிப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.
  Published by:Suresh V
  First published: