கழிவுநீர் தொட்டியில் விஷவாயு... தம்பியைக் காப்பாற்றிய அண்ணன் உயிரிழந்த சோகம்...!

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு... தம்பியைக் காப்பாற்றிய அண்ணன் உயிரிழந்த சோகம்...!
உயிரிழந்த இளைஞர்
  • News18
  • Last Updated: November 12, 2019, 3:51 PM IST
  • Share this:
தனியார் வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை அதிகாலையில் இறங்கி சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ தனியார் வணிக வளாகத்தில் இன்று அதிகாலை ஐஸ்அவுஸ் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், ரஞ்சித்குமார் ,யுவராஜ் உட்பட 5 தொழிலாளிகள் கழிவுநீர் தொட்டியை, இறங்கி சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்த ரஞ்சித் குமார் என்பவரை விஷவாயு தாக்கியுள்ளது.

அதை பார்த்த அவருடைய சகோதரர் அருண்குமார் உடனடியாக கழிவுநீர் தொட்டியில் தான் இறங்கி ரஞ்சித் குமாரை காப்பாற்றி உள்ளார். பின்னர் கழிவு நீர் தொட்டியில் இருந்து மேலே ஏற அவர் முயன்ற போது, விஷவாயுவில் சிக்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.


இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா சாலை போலீசார் உயிரிழந்த அருண்குமார் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து அண்ணாசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருண்குமாருக்கு 7 மாத கை குழந்தை உள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் உள்ளோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுமை தூக்கும் கூலி வேலை செய்த வந்த அருண்குமார் உட்பட ஐந்து பேரை ஐஸ்அவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் தான் எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திற்கு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்கு அழைத்து சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தி இது போன்ற உயிருக்கு ஆபத்தான பணியில் ஈடுபடத்த கூடாது என்ன விதிகளை மீறிய, தனியார் வணிக வாளக நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயிரிழந்த அருண்குமார் உறவினர்கள் வலியுறுத்துகின்றனர்.
First published: November 12, 2019, 11:06 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading