சென்னையில் கொரோனா குறித்த முழு அப்டேட்...!

”சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 69.63% பேரும், பெண்கள் 30.37% பேர்”

சென்னையில் கொரோனா குறித்த முழு அப்டேட்...!
கோப்புப் படம்
  • Share this:
சென்னையில் இதுவரை மொத்தம் 217 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதில், 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24 பேர் குணமடைந்து உள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 65 பேரும், திருவிக நகரில் 32 பேரும், கோடம்பாக்கத்தில் 24 பேரும்,  அண்ணாநகரில் 23 பேரும்,  தடையார்ப்பேட்டையில் 20 பேரும், தேனாம்பேட்டையில் 18 பேரும் உள்ளனர்.

மேலும், பெருங்குடி மற்றும் அடையாறில் 7 பேரும், வளசரவாக்கத்தில் 5 பேரும், திருவொற்றியூரில் 4 பேரும், மாதவரத்தில் 3 பேரும், ஆலந்தூரில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும் உள்ளனர்.


சென்னையில் மணலி மற்றும் அம்பத்தூரில் இது வரை கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாரும் இல்லை.

மண்டலம் - மொத்தம் - உயிரிழந்தவர்கள் - குணமடைந்தவர்கள்:

திருவொற்றியூர் - 4 - 0 - 0மணலி - 0 - 0 - 0

மாதவரம் - 3 - 0 - 0

தண்டையார்பேட்டை - 20 - 1 - 0

ராயபுரம் - 65 - 5 - 1

திருவிக நகர் - 32 - 1 - 0

அம்பத்தூர் - 0 - 0 - 0

அண்ணாநகர் - 23 - 0 - 7

தேனாம்பேட்டை - 18 - 0 - 2

கோடம்பாக்கம் - 24 - 0 - 6

வளசரவாக்கம் - 5 - 0 - 3

ஆலந்தூர் - 3 - 0 - 1

அடையார் - 7 - 0 - 1

பெருங்குடி - 7 - 0 - 2

சோழிங்கநல்லூர் - 2 - 0 - 1

சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் உள்ள மண்டலங்களில் 84 இடங்கள்  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மண்டலம் வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் விபரங்கள் .

மண்டலம் - எண்ணிக்கை - வார்டு எண்:

திருவொற்றியூர்  - 3 (வார்டு -1,2)

மாதவரம் - 3 (வார்டு - 25, 31, 32 )

தண்டையார்பேட்டை - 10 (வார்டு - 34, 37, 38, 40, 43,45,47,46,48)

ராயபுரம் - 21 (வார்டு - 50,52,53,55,56,57,58,59,60,61,63)

திருவிக நகர் - 18 (வார்டு - 64,66,68,71,73,74,75,76,77,78)

அண்ணாநகர் - 2 (வார்டு - 108)

தேனாம்பேட்டை - 10 (வார்டு - 109,112,115,120,126)

கோடம்பாக்கம் - 4 (வார்டு - 128,137,139,142)

வளசரவாக்கம் - 3 (வார்டு - 145,148)

அடையாறு - 3 (வார்டு - 170,172)

பெருங்குடி - 5 (வார்டு - 169,184,185)

சோழிங்கநல்லூர் - 2 (வார்டு -196,198)

சென்னையில் ஆண்கள் 69.63% பேரும், பெண்கள் 30.37% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வயது வாரியாக பார்க்கையில், அதிகபட்சமாக 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 44 பேருக்கு தொற்று உள்ளது.

குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் 1 நபரும், 80 வயதுக்கு மேல் 3 நபரும் பாதித்து உள்ளனர்.10 முதல் 19 வயதுள்ளோர் 14 பேருக்கும், 20 முதல் 29 வயதுள்ளோர் 32 பேருக்கும், 40 முதல் 49 வயதுள்ளோர் 41 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 41 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 22 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 14 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள் உள்ளதா என வீடு வீடாக சோதனை செய்யப்படும் வரும் பணிகள் 95% முடிவுற்று உள்ளன என்றும், இதுவரை 1,80,89,198 பேருக்கு அறிகுறிகள் பரிசோதனை செய்ததில் 693 பேருக்கு அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

எனவே, சென்னை மக்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறும், வெளியே வரும்போது அவசியம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

















Also see...
First published: April 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading