ஒரு எலியைப் பிடிக்க 22 ஆயிரம் செலவு செய்த சென்னை ரயில்வே மண்டலம்..!

கடந்த மூன்று வருடங்களில் மட்டும் பெரும் தொகையாக 5.89 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது

ஒரு எலியைப் பிடிக்க 22 ஆயிரம் செலவு செய்த சென்னை ரயில்வே மண்டலம்..!
கடந்த மூன்று வருடங்களில் மட்டும் பெரும் தொகையாக 5.89 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது
  • News18
  • Last Updated: October 10, 2019, 12:58 PM IST
  • Share this:
இந்திய ரயில்வேயின் சென்னை மண்டலம் ஒற்றை எலியை பிடிக்க 22,300 ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளித்துள்ளது.

இதில் என்ன ஆச்சரியம் எனில் ரயில்களில் எலிகளைப் பிடிக்க கடந்த மூன்று வருடங்களில் மட்டும் பெரும் தொகையாக ரூ.5.89 கோடி செலவு செய்துள்ளது.

ஜூலை 17-ம் தேதி ஆர்டிஐ சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்துள்ள பதில் அறிக்கையில் சென்னைப் மண்டல ரயில்வே சில வருடங்களாகவே எலித் தொல்லையால் மிகவும் சிரமப்பட்டு வந்ததாகவும், அவை பல சேதங்களை செய்து வந்ததுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அதிகாரிகளும் எலிகளை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் அதாவது மே மாதம் 2016 தொடங்கி ஏப்ரல் 2019 ஆண்டு வரையில் மட்டுமே 5.89 கோடி எலிகளை ஒழிக்க மட்டுமே செலவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.


கடந்த ஒரு ஆண்டில் மட்டும் குறைந்த பட்சமாக 2,636 எலிகளை மட்டுமே பிடிக்க முடிந்தது. அதில் 1,715 எலிகள் சென்னை செண்ட்ரல் ரயில், எழும்பூர், செங்கல்பட்டு, தாம்பரம் , ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களிலும் 921 எலிகளை ரயில்வே பயிற்சி மையத்திலும் பிடித்துள்ளது. அதில் தோராயமாக ஒரு எலியைப் பிடிக்க மட்டுமே 22,334 ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பார்க்க :

காடை வளர்ப்பில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்…! எப்படி?
First published: October 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்