சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகராக அறிவியுங்கள் - மத்திய அரசுக்கு எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள்

ரவிக்குமார், பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக சென்னையை அறிவியுங்கள் என்று எம்.பி ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

 • Share this:
  மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரகமாக மாற்ற வேண்டும் என்று அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியும் அந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளனர். தி.மு.க எம்.எல்.ஏ சரவணனும் அதனைத் தெரிவித்துள்ளார்.

  இந்தநிலையில், விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி ரவிக்குமார் இந்தியாவின் தலைநகராக சென்னையை அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான அவருடைய ஃபேஸ்புக் பதிவில், ‘இந்தியாவின் இரண்டாவது தலைநகராக சென்னை யை அறிவியுங்கள்!  புதிய பாராளுமன்றத்தை சென்னையில் கட்டுங்கள்!

  மத்தியில் ஆளும் பாஜக அரசு புதிய நாடாளுமன்றம் கட்டுவதில் முனைப்பாக இருக்கிறது. ஏற்கனவே பாராளுமன்றத்துக்கென சிறப்பு வாய்ந்த கட்டடம் இருக்கும்போது புதிதாக கட்ட வேண்டிய தேவை இல்லை என்று பலரும் கூறிய பின்னரும் அவர்கள் கேட்பதாக இல்லை. இந்தியாவில் இரண்டாவதாக ஒரு நாடாளுமன்றம் கட்டவேண்டும் என்றால் அதை சென்னையில் கட்டுங்கள். குளிர்காலக் கூட்டத்தொடரை சென்னையில் நடத்துங்கள். வட மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் தென் இந்தியப் பண்பாட்டை, வளர்ச்சியை நேரில் பார்த்து தமது மாநிலமும் இப்படி முன்னேறவேண்டும் என்ற உணர்வைப் பெறட்டும். இந்தியாவின் இரண்டாவது தலைநகராக சென்னையை அறிவியுங்கள். அதிகாரப் பரவலாக்கத்துக்கு அது அடையாளமாகத் திகழும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Karthick S
  First published: