தமிழகத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை - முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

காலை 11:45 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை - முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:55 PM IST
  • Share this:
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கோடை மழை பொய்த்துப் போனதால் தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக சென்னையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அளவிற்கு குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

சென்னையை சுற்றியுள்ள ஏரிகள் முற்றிலும் வறண்டு போயுள்ளதால் சென்னைக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தவிக்கும் தமிழகம் என்ற தலைப்பில் நியூஸ் 18 தொலைக்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நாள் முழுவதும் சிறப்பு நேரலை செய்திகளை வழங்கியது.


இந்நிலையில் தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

காலை பதினொன்று நாற்பத்தைந்து மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் பங்கேற்க உள்ளனர்.

Also see... புளித்த மாவு... தாக்குதல்... நடந்தது என்ன? - எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading