உள்ளாட்சி தேர்தல் - வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம்...? டெபாசிட் தொகை எவ்வளவு செலுத்த வேண்டும்...?

உள்ளாட்சி தேர்தல் - வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம்...? டெபாசிட் தொகை எவ்வளவு செலுத்த வேண்டும்...?
  • News18
  • Last Updated: December 2, 2019, 12:58 PM IST
  • Share this:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை, செலவின விபரங்களை பார்க்கலாம்.

தமிழகத்தில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்கும் என்று மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. வரும் 6-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. டிசம்பர் 13-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 18-ம் தேதிக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறலாம். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடக்கும்.
ஊராட்சி வார்டு,  ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடக்கும்.

கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கு நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படும். ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வெள்ளை நிறத்திலும் கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக முதற்கட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே மட்டுமே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நகராட்சிக்கான தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை விபரங்கள்:

பொதுப்பிரிவை சேர்ந்த வேட்பாளர்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.200, கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு ரூ.600, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.600, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1000 டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும்.

வேட்பாளர்கள் பதிவான செல்லத்தக்க வாக்குகளில் 6-ல் ஒருபங்கு வாக்குகளை பெற்றிருந்தால், அவர்களின் டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படும். உதாரணமாக ஒரு ஊராட்சி வார்டில் 60 வாக்குகள் பதிவானது என்று எடுத்துக்கொண்டால், 10 மற்றும் அதற்கு மேல் வாக்குகளை பெறும் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை திரும்ப பெற தகுதியானவர்கள் ஆவர்.

தேர்தல் செலவினங்கள்:

வேட்பாளர்களுக்கான அதிகபட்ச தேர்தல் செலவின வரம்பானது கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவோருக்கு ரூ.9 ஆயிரமும், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர்களுக்கு ரூ. 34 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவோர்களுக்கு ரூ.85 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவோர்களுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் செலவு செய்யலாம் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 தினங்களுக்குள் உரிய அலுவலரிடம் தேர்தல் செலவினக் கணக்குகளை ஒப்படைத்திட வேண்டும். ஒப்படைக்கத் தவறுபவர்கள் மீது தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இயலாதவாறு மூன்று ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

Also Read:

31 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல் வெளியீடு...!

ராஜாஜி முதல் எடப்பாடி பழனிசாமி வரை...! உள்ளாட்சியில் அரசியலை ஆரம்பித்து உச்சம் தொட்டவர்கள்

Also See...
First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading