மத்திய அரசின் பதில் கிடைத்த பின்னரே CAA, NRC குறித்து முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர்

அடுத்த 2 மாதங்களுக்கு NPR ஐ அமல்படுத்த வாய்ப்பில்லை என ஆறுதல் .

மத்திய அரசின் பதில் கிடைத்த பின்னரே CAA, NRC குறித்து முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி
  • Share this:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி  முதலமைச்சர் இல்லத்தில் தமிழக அரசுத் தலைமை காஜி டாக்டர். சலாவுத்தீன் முஹமத் அய்யூப் சாஹீப் மற்றும் காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளத் தாவூத் மியாகான் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு முதலமைச்சரைச் சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம்  தாவூத் மியாகான், “ CAA க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும், NPR-ஐ தமிழகத்தில் கொண்டுவருவதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் NRC-ஐ அனுமதித்தால் அது NPR-ஐ அனுமதித்தது போலாகிவிடும்” என்பது குறித்தும் எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், தங்களது கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட முதலமைச்சர் நிச்சயம் மத்திய அரசிடம் இதுபற்றி எடுத்துரைப்போம் எனவும், அடுத்த 2 மாதங்களுக்கு NPR ஐ அமல்படுத்த வாய்ப்பில்லை எனவும் கூறியது தங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக தெரிவித்தார்.


அதுமட்டுமல்லாமல், மத்திய அரசிடமிருந்து தெளிவான ஒரு பதில் கிடைத்த பின்னரே இது குறித்து அரசு முடிவெடுக்கும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் முழுவதும் மக்களின் எழுச்சி காரணமாக ஏற்பட்டவை எனவும் அதை கைவிடுவது குறித்து மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும், இம்மூன்று சட்டங்கள் தொடர்பான தங்களது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனக்கூறிய அவர், போராட்டங்கள் நடத்தும் எண்ணம் மக்கள் மனதிலிருந்து மாறவேண்டும் என்றால் அதற்கான நடவடிக்கைகளை அரசுதான் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
First published: March 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading