வாக்குறுதி என்ற மிட்டாயைக் கொடுத்துதான் தி.மு.க வெற்றி பெற்றது - முதலமைச்சர் பழனிசாமி தாக்கு

பொதுத் தேர்தல் போல் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்துதான் தி.மு.க வெற்றி பெற்றுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

வாக்குறுதி என்ற மிட்டாயைக் கொடுத்துதான் தி.மு.க வெற்றி பெற்றது - முதலமைச்சர் பழனிசாமி தாக்கு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • News18
  • Last Updated: July 20, 2019, 7:15 PM IST
  • Share this:
தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடந்து முடிந்த தேர்தலில் வாக்குறுதி என்ற மிட்டாயை கொடுத்துதான் திமுக வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ”நடந்து முடிந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.கவிற்கு மக்கள் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளார்கள். அ.தி.மு.க வசம் இருந்த பல தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியுள்ளது” என்று பேசினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர், ”குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பது போல், வாக்குறுதி என்ற மிட்டாயை கொடுத்துதான் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். ஆனால் நாங்கள் பெற்றது உண்மையான வெற்றி” என்று கூறினார்.


அதற்கு, ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளீர்கள் என்று கூறி தி.மு.கவையும் மக்களையும் கொச்சைப்படுத்துவது சரியில்லை என்று மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

அப்போது மீண்டும் குறுக்கிட்ட முதலமைச்சர், பொது தேர்தல் போல் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்துதான் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள் என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த ஸ்டாலின், " நிலைமை மாறும், நாங்கள் ஆட்சிக்கு வருவோம் அப்போது நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்" என்று கூறினார்.

Loading...

தொடர்ந்து இப்படியே வாக்குவாத மோதல் ஏற்பட்டதால், சட்டப்பேரவையில் தி.மு.கவுக்கும் , அ.தி.மு.கவுக்கும் இடையில் சலசலப்பு ஏற்பட்டது.

Also Watch: குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய Good touch, Bad touch! அவசியம் பாருங்கள்

First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...