கிறிஸ்துவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை மாற்ற கோரி நீதிமன்றத்தில் வழக்கு

பெரிய வியாழன், புனித வெள்ளி, ஈஸ்டர் போன்ற பண்டிகைகளுடன் அந்த வாரம் முழுவதும் புனித வாரமாக கடைபிடிக்கப்படுவதாகவும், கிறிஸ்தவ பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் போது, தேர்தல் ஆணையம் அப்பள்ளிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதால், பக்தர்கள் வழிபாடு செய்ய முடியாத நிலை ஏற்படும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்துவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை மாற்ற கோரி நீதிமன்றத்தில் வழக்கு
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: March 18, 2019, 6:39 PM IST
  • Share this:
பெரிய வியாழன் பண்டிகை காரணமாக, கிறிஸ்துவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற கோரி தமிழ்நாடு பிஷப் கவுன்சில் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அன்று கிறிஸ்தவர்களின் பெரிய வியாழன் பண்டிகை கொண்டாடப்படுவதால், தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் அல்லது கிறிஸ்தவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என தமிழ்நாடு பிஷப் கவுன்சில் தலைவர் அந்தோணி பப்புசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


பெரிய வியாழன், புனித வெள்ளி, ஈஸ்டர் போன்ற பண்டிகைகளுடன் அந்த வாரம் முழுவதும் புனித வாரமாக கடைபிடிக்கப்படுவதாகவும், கிறிஸ்தவ பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் போது, தேர்தல் ஆணையம் அப்பள்ளிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதால், பக்தர்கள் வழிபாடு செய்ய முடியாத நிலை ஏற்படும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது.

இதுக்குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கும், பக்தர்கள் வழிபாடு செய்யவதற்கு இடையூறு ஏற்படாமல் இருபதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.Also see...

First published: March 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading