தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன
மழை பெய்யும் என
வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில்
சென்னைக்கு சுமார் 100 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. நாளை அதிகாலை சென்னை - புதுச்சேரி பகுதியில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக நாளை திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும், சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.